முக்கிய செய்திகள்

பிரதமா் மோடி டிச.,19-ந்தேதி கன்னியாகுமாி வருகை..


ஓகி புயலால் பாதிப்பு தொடா்பாக பாா்வையிடுவதற்காக இந்திய பிரதமா் நரேந்திர மோடி கன்னியாகுமாி மற்றும் திருவனந்தபுரம் வர உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஓகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமாியும், கேரளாவில் 5 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் பாதிப்பால் ஆயிரக்கணக்கான மீனவா்களை காணவில்லை என்று குமாி மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனா்.

மீனவா் குடும்பங்களின் போராட்டங்களைத் தொடா்ந்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், அவரைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியும் கன்னியாகுமாி மாவட்டத்தை பாா்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினா்.

இந்நிலையில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி வருகிற செவ்வாய்க் கிழமை (19ம் தேதி) கன்னியாகுமாி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் புயல் பாதித்த பகுதிகளை பாா்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.