முக்கிய செய்திகள்

மும்பையில் முக்கி முணகி ஓடும் மோனோ ரயில்: நல்ல வேளையாக தப்பித்தது சென்னை!

மும்பையில் பத்து மாதங்களுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்ட மோனோரயில் திடீரென பாதிவழியில் நின்றது. வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்கலைச் சரிசெய்த பின்னர் மோனோ ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது.

மும்பை செம்பூர் – வடாலா இடையே மோனோ ரயில் கட்டமைப்பு அமைக்கப்பட்டு 2014பிப்ரவரி முதல் இயக்கப்பட்டு வந்தது. 2017நவம்பர் ஒன்பதாம் நாள் மைசூர் காலனி நிலையத்தில் தீவிபத்து நேர்ந்ததையடுத்து மோனோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் 10மாதங்களுக்குப் பின் மீண்டும் நேற்றுச் செம்பூர் – வடாலா இடையே மோனோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செம்பூர் நாக்கா நிலையத்தில் மோனோரயில் திடீரென நின்றுவிட்டது. ரயில் நின்றதற்கான காரணம் குறித்துத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். அப்போடு, டிவி கேபிள் வயர் மோனோ ரயில் வழித்தடத்தில் சிக்கியதால் மோனோ ரயில் நின்றது தெரிய வந்தது. அவற்றை அகற்றிய பின்னர் மீண்டும் மாலை 4.40 மணி முதல் மோனோ ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. 

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு மோனோ ரயில் திட்டத்தை தொடங்கப் போவதாக ஜெயலலிதா கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார். மூன்று வழித்தடங்களில் இந்தத் திட்டம்செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. ஒருவழியாக அந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த ஜூலை மாதம் பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கமணி விளக்கமளித்தார். சென்னையில் மோனோ ரயிலை அறிமுகப்படுத்தி இருந்தாலும் அது இப்படி முட்டி மோதிக்கொண்டுதான் நின்றிருக்குமோ என்னவோ?

Monorail was put back to normal service at Mumbai