நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா

நிலாவில் தரை இறங்கி உள்ள சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய சேஞ்ச் -4 விண்கலம், பத்திரமாக தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அத்தோடு, அந்த கலத்தில் இருந்து நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும், யாடு கலமும் தனியே ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே சேஞ்ச்-4 விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தட்டவெப்ப சூழலில் , பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழல் இருப்பது மெல்ல உறுதியாகி வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதே போன்று உருளை கிழங்கு உள்ளிட்ட சில பயிர்களின் விதைகளையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன.

இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் வளர்ந்தால், அடுத்து அங்கு மனித குடியேற்றத்திற்கு நாள் குறிக்க முடியும் என்பதே ஆய்வாளர்களின் ஆர்வத்திற்கு காரணமாகும்.

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்

Recent Posts