உலகளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளின் வரிசையில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி 55.3 டன்கள் தங்கம் கொள்முதல் செய்தது .
அதன் மூலம் அந்நாட்டின் தங்க இருப்பு 2,168 டன்களாக உயர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் ((world gold council)) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேபோல் சீனா, இந்த காலாண்டில் அதிகபட்சமாக 33 டன்கள் கொள்முதல் செய்து, 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் சென்ட்ரல் வங்கிகள் கொள்முதல் செய்யும் தங்கத்தின் அளவு, கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் 68 சதவீதம் அதிகரித்து வருவதாக உலக தங்க கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.