காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலானர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். காரணம் வேலைப்பளு மற்றும் உடல் எடை குறையும் என்ற மூடநம்பிக்கையால் பலர் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து சர்வதேச அளவில் ஒரு லட்சம் பேரிடம் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
இதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர்.
வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கிராமப்புற மக்களை விட நகர்புற மக்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர்.
நீரிழிவு நோய் ஏற்பட காலை உணவை தவிர்ப்பதும் ஒரு காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
நீரிழிவு நோயை தடுக்க தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.