முக்கிய செய்திகள்

தாயின் இரண்டாவது திருமணம் குறித்த இளைஞரின் முகநூல் பதிவு

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் 2வது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

கொல்லம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல் ஸ்ரீதர் என்பவர் தான் இந்த நெகிழ்ச்சிப் பதிவுக்கு சொந்தக்காரர்.

அந்த பதிவில், முதல் திருமணத்தில் தனது தாய் தந்தையிடம் அனுபவித்த கொடுமைகளையும்,

அவற்றை தனக்காக பொறுத்துக் கொண்டு அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூறியுள்ள கோகுல், 2வது திருமணம் என்பது இன்றளவும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.