
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் 22,000க்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.