தமிழகத்தை நோக்கி வரும் நிவர் புயல்: அதிகனமழை எச்சரிக்கை…

தமிழகத்தை வரும் 25-ம் தேதி புயல் தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் அறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி இன்னும் 2 நாட்களில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) அன்று அது புயலாக மாறி தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன.

புயலானது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கிறது. அப்போது 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும். கடல் பகுதியில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 25-ந்தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும்.
24-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும். அதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை முதல் மிக கனமழை இருக்கும்.

25-ம் தேதி டெல்டா மாவட்டங்களான கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும். திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்ம்புரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும்.

26-ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் தென் வங்கக் கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கைசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் அவதூறு செய்தி பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை? அதிர்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம் கருத்து..

வழிப்பறியில் ஈடுபட்ட பா.ம.க மாவட்ட செயலளார் கைது …

Recent Posts