முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர்கள் படுகொலை : படிக்க முடியாமல் உறைந்த செய்தி வாசிப்பாளர் (வீடியோ)

 

அமெரிக்காவில் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சி நே்ரலையில் வாசிக்க முடியாமல், பெண் செய்தி வாசிப்பாளர் கலங்கிய காட்சி பார்வையாளர்களை உலுக்கி உள்ளது.

மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அன்னாபோலிஸ் நகரில் இருந்து கேபிடல் கெஸட்(Capital Gazette) என்ற நாளேடு வெளிவருகிறது. இந்த அலுவலகத்திற்குள் புகுந்து 34 வயது பெண் பத்திரிகையாளர் ரெபக்கா ஸ்மித் என்பவர் உட்பட 5 பேரை ஒரு கும்பல் அலுவலகத்திர்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அமெரிக்காவில், ஏற்கனவே குடியேற்றச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. 

பத்திரிகையாளர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் என்றெல்லாம் அதிபர் ட்ரம்ப் அறிவித்தாலும், அவரது ஆட்சி மீதான அதிருப்தியை அதிகரிப்பதற்கான மோசமான சம்பவமாகவே பத்திரிகையாளர்கள் படுகொலை பார்க்கப்பட்டது. இந்தப் படுகொலையைக் கண்டிக்கும் வகையில், கேபிடல் கெஸட் பத்திரிகை மறுநாள் முதல் பக்கத்தை செய்திகள் எதுவுமின்றி காலியாக வெளியிட்டது. பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியை MSNBC தொலைக்காட்சியில் ஸ்டெஃபானி ருலே (Stephanie Ruhle) என்ற பெண் செய்தி வாசிப்பாளர் வாசித்தார். படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் பெயர்களை சொல்லத் தொடங்கிய ருலே, துக்கம் தொண்டையை அடைத்ததால், சில நிமிடங்கள் கண் கலங்கியபடி மௌனமானார். இந்தக் காட்சி செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களை நெகிழச் செய்துவிட்டது. பத்திரிகையாளர்கள் படுகொலைச் செய்தியால் நேரலையிலேயே துக்கத்தில் உறைந்த பெண் செய்திவாசப்பாளற் ருலே, இப்போது அமெரிக்காவில் பிரபலமாகி விட்டார். .   

கேபிடல் கெஸட் பத்திரிகை –  படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் படம், அடுத்தது  காலியாக விடப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான கேபிடல் கெஸட் நாளேடு

MSNBC ANCHOR STEPHANIE RUHLE CHOKES UP ON LIVE TV WHILE REPORTING ON MURDERED JOURNALISTS