முக்கிய செய்திகள்

பொன்னேரி பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது..


திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் விளை நிலங்களில் செல்கிறது.பொன்னேரி அருகே பலத்த மழையால் நிரம்பிய பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரிக்கரை உடைந்தது. ஏரி உடைந்து விலைநிலத்திற்குள் தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மணல் முட்டைகளை அடுக்கி வைத்து பொதுமக்கள் உடைப்பை சரி செய்து வருகின்றனர்.