முக்கிய செய்திகள்

முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி…

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

முலாயம் சிங் யாதவை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் முலாயம் சிங்குக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டு அங்கிருநது கார் மூலம் ஹரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முலாயமுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.