
முல்லைபெரியாறு அணை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தேக்கடியிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம் மேற்கொண்டனர். அமைச்சர் துரைமுருகனுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். மெயின் அணை, பேபி அணை, 13 ஷட்டர் பகுதி கேலரி பகுதிகளுக்கு அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.