முக்கிய செய்திகள்

மும்பை தாக்குதல்: 10 ஆம் ஆண்டு தினம் அனுசரிப்பு

மும்பை தாக்குதல் தினத்தின் 10 ஆம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், நவம்பர் 26ஆம் தேதி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 164 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 நாட்கள் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற போலீசார், அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதியை மட்டும் உயிருடன் பிடித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பின்படி, கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பை நகரின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மஹாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஒட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அந்த நாளை நினைவு கூர்ந்து தங்களது அஞ்சலிக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவன் ஹபீஸ் சையதை வீட்டுச்சிறையில் இருந்து பாகிஸ்தான் விடுவித்திருப்பதற்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Mumbai Attack : 10th anniversary