ஐபிஎல் போட்டியில் சென்னையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று மும்பை அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்றது.
ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு போட்டிகள்தான் மீதம் உள்ளன. இந்நிலையில் குவாலிஃபையர் 1 சுற்றில் சென்னை சூப்பர் கிங்க்ஸும் மும்பை இந்தியன்ஸும் நேற்று (07.05.2019) சென்னையில் மோதின.
டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததால் ரன் அடிக்கமுடியாமல் சென்னை அணி திணறிக்கொண்டு இருக்கும்போதே விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது ஓவரில் டுப்ளஸிஸ் ஆறு ரன்கள் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே ஐந்து ரன்னோடு ரெய்னா கிளம்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. வாட்சன் ஆறாவது ஓவரில் அவுட் ஆக, முரளி விஜய் கிளம்பியது ராயுடுவோடு 13வது ஓவரில் வந்தார் தோனி. ராயுடுவும் தோனியும் இணைந்து அடித்ததுதான் அணியின் ஸ்கோரே. இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 42, 37 ரன்கள் அடித்திருந்தனர். 20 ஓவர் முடிவில் வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை அணி 9 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 132 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. அதிகமட்சமாக சூர்யகுமார் யாதவ் 71 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் மும்பை நேரடியாக ஃபைனலுக்கு சென்றது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லியும் ஹைதராபாத்தும் மோதுகின்றன. அதில் யாரு வெற்றி பெருகிறார்களோ அவர்களுடன் சென்னை அணி வரும் வெள்ளி அன்று நடைபெறும் குவாலிஃபையர் 2 விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி மும்பையுடன் ஃபைனலில் மோதும்.