மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல், ..

263 பயணிகளுடன் மும்பையிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரின் ஷாங்காய் விமானநிலையத்திற்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டது.

நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் ஒன்று வந்திருப்பதாக விமானி அறிவித்தார்.

உடனடியாக நெருக்கடி நிலை பிரகடன படுத்தப்பட்டு, சிங்கப்பூர் விமான படை உதவியுடன் அந்த விமானம் காலை 8 மணியளவில் ஷாங்காய் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது.

263 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டார்கள், அதன் பின் பயணிகள் அனைவரும் தீவிரமான சோதனைக்கு பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கு பின்னரே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. எனினும் வதந்தியை பரப்பியவர்களை தீவிரமாக தேடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவலைத் தடுக்க 7000 கோடியில் சுவர் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம்..

சிவகங்கை காங்.,செயல்வீரர் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன்..

Recent Posts