"முரசொலி"க்கு வயது 73 : நினைவுகளை நெகிழ்ச்சியுடன் அசைபோடும் கலைஞர் கருணாநிதி

Murasoli – 73 : karunanidhi memories 

_____________________________________

 

karunanidhi 2ஆகஸ்ட் 10 – “முரசொலி” பிறந்தநாள்!

 

1942ஆம்ஆண்டுஅகல்விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக்கதிர் விளக்காக ஒளிவிடும் “முரசொலி” யின்நிறுவனர் என்றநிலையில் இந்தநாளில் சிலநினைவுகள்!

 

10-8-1942 – ஆகஸ்ட் 10 என்பதை நாட்காட்டியில் கண்டதும், என்நெஞ்சில் ஒளிவெள்ளம் கரைபுரண்டோடுகிறது; காரணம்அந்தநாள்தான், முரசொலிபிறந்தநாள் – இந்தஆகஸ்ட்திங்கள் 10ஆம்தேதிமுரசொலிக்கு 73வதுபிறந்தநாள். எந்த முரசொலி? துண்டுத்தாளாகத் தொடங்கி, வார இதழாக வளர்ந்து, நாளேடாகத் தொடர்ந்து நடைபோட்டு வரும் முரசொலி! கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாதஇதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 14.1.1948 -இல்வார இதழாகவும் 17.9.1960-இல் நாளேடாகவும் அச்சில்வெளிவரத்தொடங்கியது. முரசொலிக்குஇன்றுஆகஸ்ட் 10ஆம்தேதி 73வது வயது பிறக்கிறது. எனக்கோ 91 வயது முடிந்து விட்டது. ஆம், என்னுடைய 18வது வயதில்தான் முரசொலி பிறந்தது!

 

1942ஆம்ஆண்டு அகல் விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக் கதிர் விளக்காக ஒளிவிடும் “முரசொலி” யின் நிறுவனர் என்ற நிலையில் இந்தநாளில் சில நினைவுகள்!

 

நான் என்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்ததைப் போலவே, நான் தொடங்கியதாலோ என்னவோ; முரசொலியும் பலசோதனை, வேதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அது சந்தித்த வழக்குகள் எத்தனையோ? எதற்கு இதனைச் சொல்கிறேன் என்றால், “முரசொலி” பிறந்த அதேநாளில் – இன்றைய தினம் நமது கழகத்தின் சார்பில் மது விலக்குக் கொள்கைக்காக மாவட்டக் கழகத் தலைநகரங்களில் எல்லாம், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை எண்ணிடும் போது, இதிலே உள்ள பொருத்தத்தைப் பார்த்து நான் இறும்பூது எய்துகிறேன்!

 

உடன்பிறப்பே, நீ, இந்த ஆர்ப்பாட்டக் களத்தில் நெஞ்சுயர்த்தி நிற்கும் போது, என்னுடைய இந்த மடலை படிப்பாய் என்பதையும், இந்தநாள் “முரசொலி பிறந்தநாள்” என்பதை நீதவறாமல் நினைவு கூர்வாய் என்பதையும் நான் நன்றாகவே அறிவேன்.

 

இந்த முரசொலியினை நான் தொடங்கிய அதே 1942ஆம் ஆண்டுதான், பேரறிஞர் அண்ணா அவர்களை நான்சந்தித்த ஆண்டுமாகும். 1942இல் அறிஞர் அண்ணாவின் `திராவிடநாடு’ இதழில் நான் எழுதிய `இளமைப்பலி’ என்ற கட்டுரை வெளியாயிற்று. அதே ஆண்டில் திருவாரூருக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்த போது என்னை அழைத்துவரச் செய்து, பாராட்டிவாழ்த்தி, அறிவுரைகளும்வழங்கினார். எனவேஅண்ணாவை எண்ணும் போது முரசொலியும், முரசொலியை நினைக்கும் போது அண்ணாவும் என் நெஞ்சில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

 

என்னுடைய  20வது வயதில், தந்தை பெரியார் அவர்கள் திருவாரூர் சுயமரியாதைச் சங்கஆண்டு விழாவுக்கு வந்திருந்த போது `முரசொலி’ இதழைக் கண்டு `மிகச்சிறந்தபணி’ என்றுபுகழ்ந்து பாராட்டியதும் என்நினைவிலே நீங்காமல் இன்றும் உள்ளது.

 

அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962ஆம் ஆண்டு பொங்கல் மலருக்கு எழுதிய கட்டுரையை நினைவு கூர்ந்தால், முரசொலியின் பணி இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு முழுவதும் புரிந்திடும் :-

 

முரசொலி –
“இசைக்கு அடுத்தபடியாக தமிழரின் செவிக்கும் சிந்தனைக்கும் இனிமை பயப்பதாகும்.

 

முரசொலி –
போர்க்கருவியாக மட்டுமல்ல, புகழ்க்கருவியாக, கொடை அறிவிக்கும் கருவியாகக் கொள்ளப்பட்டு தமிழகத்தில் ஏற்றம் பெற்றிருந்த ஒன்றாகும். கேட்டுத்தமிழர் இன்புறுவர்; மாற்றார் மருளுவர்; இறுதி வெற்றி பெற்றுத் தமிழர் மகிழ்ச்சி கொள்வர்.

 

முரசொலி –
பிறர்வாழ்வையும் உரிமையினையும் மதிக்க மறுத்ததில்லை. தமது உரிமையை அழித்திட எவர் முனையினும் பொறுத்துக் கொண்டதில்லை; தன்மானத்தைப் பறித்திட முயல் வோரைத் தம் தாள்பணிய வைக்கத் தவறியதில்லை.

 

முரசொலி –
வீரத்தினை விளக்கிற்று; வீண் ஆரவாரத்தை ஆர்ப்பரிப்பைக் காட்டும் கருவியாக இருந்ததில்லை.

 

முரசொலி –
எனும் கருவி, தமிழரின் வீரத்தை, வெற்றியை, ஏற்றத்தைக் காட்டிநின்றது போலவே, தம்பி கருணாநிதியின் கைவண்ணம் நிரம்பிய கருத்துக்கோட்டம் எனத்தகும் “இதழ் வடிவு, தமிழகச்சிறப்பினை நாம்உணரச் செய்திடும் செயலினைச் செம்மையாகச் செய்து வருகிறது.

 

முரசொலி –
இதழ், கருத்தொலியும் காவிய ஒலியும், கவிதை ஒலியும் குறிக்கோள் ஒலியும் கொண்டதாகத் திகழ்ந்து வருவதனை நாடு நன்கறியும்.

 

முரசொலி –
மலர், ஆண்டுதோறும்நமக்குக்கிடைத்திடும்அணிகலன்.

 

முரசொலி –
மலர், கேடுகளைந்திடவிழைவோர்க்கு, நாடுவாழ்ந்திட வழிகாண விரும்புவோர்க்கு, தேவைப்படும் எழுச்சியைத் தரவல்லது.

 

முரசொலி –
வாழ்க; வளர்க; தம்பிகருணாநிதியின் தொண்டு வெல்க, வளர்க!”பேரறிஞர் அண்ணா அவர்களால் இவ்வாறு பல படப்பாராட்டப்பட்ட, முரசொலி – என்னுடையமுதல்குழந்தைஎன்றுஅனைவராலும்எந்நாளும்பாராட்டப்படும் “முரசொலி” இதேநாளில்தான் – 73 ஆண்டுகளுக்குமுன்பு – 10-8-1942 அன்றுதான் – தொடங்கப்பட்டது.

 

இன்றுதமிழகத்திலேஉள்ளஉடன்பிறப்புகளால்ஆர்வமுடன்ஆதரிக்கப்படுகின்ற “முரசொலி” ஏடு, தொடக்கத்தில்திங்கள்தோறும்ஆயிரக்கணக்கிலேஅச்சிடப்பட்டுஊர்தோறுமுள்ளதிராவிடஇயக்கக்கிளைகளுக்குஅனுப்பப்பட்டது. அந்தக்கிளைக்கழகத்தினர்திரட்டித்தரும்நன்கொடைகளினால் “முரசொலி” துண்டுஅறிக்கைவெளியிட்டு, கழகத்தைமுரசொலிவளர்க்க, முரசொலியைகழகம்வளர்த்தது. என்னுடையஎழுத்துக்கலையைவளர்க்கவும் “முரசொலி” காரணமாகஅமைந்தது. “முரசொலி”க்குப்பலஎழுத்தாளர்கள்உண்டு. எனினும்நான்ஆயுள்காலநிரந்தரஎழுத்தாளன். “சேரன்” என்பதுஎன்புனைபெயர். தொடக்கத்தில் இதற்குச் செயலாளர் தென்னன், பொருளாளர் டி.எஸ். ராஜகோபால் – இருவரும் இன்றைக்கு இல்லை. முரசொலியின் நினைவில் என்றும் வாழ்வர்.

 

இந்தமுரசொலியின், பொன்விழா மலருக்கு
நான் எழுதிய கவிதையில்,

 

“அஞ்சுக அன்னையிடம் உயிர்ப்பால் அருந்தி,
அய்யாவின் கொள்கையின்பால், உவப்பால் தவழ்ந்து
அண்ணாவின் பேரன்பால் ஆளாகி வளர்ந்து,
இளமைத்துடிப்பால் இந்திப்போர்ப்படை கூட்டி
இலட்சிய முனைப்பால் முரசொலிக்க வந்தவன் நான்!
ஆதிமகன் வள்ளுவன் வழி முப்பால் தந்தவளே!
அணுப்பொழுதும் அப்பால் சென்றிடாமல் – எனை
அரவணைத்துக் காக்கின்ற தமிழே! உன்சார்பில்
போர்க்கள முரசின் பொன்விழா மலரை
ஆர்த்தெழும் உடன்பிறப்பாளர் அனைவருக்கும்; நெஞ்சில் என்றும் பூத்திருக்கும் தாய், தந்தை, பெரியார், அண்ணா – மற்றும் வாழ்த்துகின்ற ஆன்றோர் சான்றோர்க்கும்; காணிக்கை ஆக்குகின்றேன்”
– என எழுதியிருந்தேன்.

 

கழகப்பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் முரசொலியின் பொன் விழாவுக்கு எழுதிய வாழ்த்துரையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் கேடயமாகத் திகழ்ந்து வரும் முரசொலி, தமிழ்ப்பயிர்வளர்க்கும்பண்ணையின்ஏராகவும்விளங்குகின்றது. எத்தனையோஅரசின்தடைகள், வழக்குகள், எதிர்பாராத இழப்புகள் இத்தனையும் தாங்கிக்கொண்டு, வேலாழ் முகத்தகளிறு என வீறுநடை போட்டு வருவது முரசொலி. அதன் பொன்விழாவில் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நின்பயணம் தொடர்க என்று வாழ்த்துகிறேன். இனமும்மொழியும் இழந்தமானம் மீட்டுத், தமிழர்தலை நிமிர்ந்து வாழும் வழிகாணச் செய்திடும் நாள் காண நீவாழ்க என்று வாழ்த்துகிறேன். வாழ்த்திவிட்டு முரசொலியைப் புரட்டுகிறேன், கலைஞர் திருமுகத்தின் மறு தோற்றமாகவே காட்சி அளிப்பதைக் காண்கிறேன், வாழ்த்துகிறேன் மறுபடியும் – எந்நாளும் வாழ்க வென்றே” என்று குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

 

முரசொலியின் வளர்ச்சிக்கு – அந்த இதழையே போர்வாளாகவும், கேடயமாகவும் ஏந்திக்கொண்டு கழகத்தை நடத்துகின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே காரணம். அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி செலுத்துகிறேன். கழகத்தின் குரலாகவிளங்கி வரும் “முரசொலி”, தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும், மொழியின் முதன்மைக்காகவும், உரிமைகளை மீட்கவும் தனது தூயபணியினைத் தொடரமேலும் வளர்த்தெடுப்பீர்!

 

முரசொலி, கல்லிலும்முள்ளிலும்பயணம்செய்தது! முரசொலி, காட்டாறுகள்பலவற்றைக்கடந்துவந்தது! முரசொலி, கடும்விலங்குக்கூட்டத்தைவென்றுவந்தது! முரசொலி, தமிழகத்தின்அரசியல்களத்தில்என்றும், இன்றும்ஒலித்துவருவது! இந்தமுரசொலியின் 73வதுபிறந்தநாளில்எனதுஅன்புஉடன்பிறப்புகளாம், அதன்வாசகர்கள்அனைவருக்கும், முரசொலியின்நிறுவனர்என்றமுறையில்உளம்நிறைந்தவாழ்த்துகள்!