முருங்கை மரத்தில் ஏறிய பிந்து மாதவி : வைரலாகும் புகைப்படம்


பிக்பாஸ் பிரபலமான நடிகை பிந்து மாதவி தன் அம்மாவிடம் முருங்கைக்காய் சாம்பார் கேட்டாராம். அதற்கு அவரின் அம்மா முருங்கைக்காய் பறித்து வரச் சொன்னாராம். உடனே பிந்து மாதவியும் தன் வீட்டு முருங்கை மரத்தில் ஏறி முருங்கைக்காய் பறித்துக் கொடுத்துள்ளார். இதைப் புகைப்படத்துடன் பிந்து தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த படங்கள் செம வைரலாகி வருகிறது.