முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்டாய முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் கூட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. கட்டாய முத்தலாக் தடை சட்டம் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, முத்தலாக் தடை சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்.
முத்தலாக் வழங்கிய பின், கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்.
முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.