பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகமெங்கும் சுமார் ரூ.30 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவரயான் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் செட்டியார் மகனாகிய காரைக்குடி T. T நகரில் வசித்து வந்த சோமகணேசன் மற்றும் அவரது மனைவி வள்ளியம்மை சோமகணேசனின் மாமனார் லட்சுமணன் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, சென்னை, கோயம்பத்தூர், பேராவூரணி,பரமக்குடி ராமநாதபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் நீங்கள் எங்களிடம் capstocks என்ற பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
மேலும், அரசு வேலை வாங்கி தருவதாகவும், வெளி நாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் பொது மக்களிடம் சுமார் ரூபாய் 30 கோடிக்குமேல் மோசடி செய்து குடும்பத்தோடு தலைமறைவு ஆகிவிட்டனர்.
இந்த குடும்பத்தினரால் பலரது வாழ்வாதாரம் இழந்து நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.இவர்களிடம் சாதாரண நடுத்தர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள்,அரசியல்வாதிகள் வரை முதலீடு செய்துள்ளனர்.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேவகோட்டையைச் சார்ந்த முக்கிய அதிமுக பிரமுகர் ஒருவர் இவர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ளார். பணத்தை இழந்த அதிமுக பிரமுகர் சோம.கணேசனை கடத்தி வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், அவரிடமிருந்து சோம.கணேசன் தப்பித்து வந்ததாகவும் தெரிகிறது. இது போல் முன்னாள் வட்டாசியர் பெரும்பணத்தை இவர்களிடம் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார்.பணமுதலீடு செய்த அனைவரையும் ஏமாற்றி விட்டு சோம.கணேசன் தலை மறைவானார். பணத்தை இழந்த பலர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்
இந்நிலையில் சோம.கணேசன் மனைவி வள்ளியமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கணவரைக் காணவில்லை என “ஆட்கொணர்வு” மனுத் தாக்கல் செய்தார்.மனு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சோம.கணேசனை காரைக்குடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்