எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…

காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம்.  சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல் சுவாமிநாதனே எம்.வி.வியைப் பேட்டி கண்டிருந்தார். காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த தருணம் என நினைக்கிறேன். (1993) அதில், இத்தனை தாமதமாக கிடைத்த விருதை நீங்கள் மறுத்திருக்கலாமே என்ற தொனியில் கோமல் கேட்டிருப்பார். அதற்கு” வெறும் விருதென்றால் மறுத்திருப்பேன். அத்துடன் ஒரு காசோலையும் தருவார்கள் அல்லவா… என்னால் இதுவரை எந்த நலனையும் அனுபவிக்காத என் குடும்பத்திற்கு அது பயன்படுமே என்று வாங்கிக் கொண்டேன்” என்ற பொருளில் எம்.வி.வி பதில் சொல்லி இருப்பார். அந்தப் பேட்டி நெடுகிலும் ஒருமகத்தான படைப்பாளிக்கும், நெருக்கடிகள் மிகுந்த அவனது சுயவாழ்க்கைக்கும் நடக்கிற போராட்டத்தின் கதையாகவே விரிந்திருக்கும். நான் படித்தவற்றில் மறக்க முடியாத ஒரு நேர்காணல் அது. அத்தகைய பெருங்கலைஞனான எம்.வி.வெங்கட்ராமின் அரிய புகைப்படம் ஒன்றை கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு பலரும் தங்களது பாராட்டுதல்களையும், எண்ணங்களையும் பின்னூட்டப்பதிவாக பகிர்ந்து கொண்டிருந்தனர். எந்தெந்த கண்ராவிகளின் ட்விட்டரையெல்லாம் ஊடகங்கள் செய்தியாக்குகின்றன. அதற்கு மாறாக இலக்கிய வாதிகளின் பதிவுகளையும், எண்ணங்களையும்  கொண்டாடலாமே எனத் தோன்றியது…. இதோ கவிஞர் ரவி சுப்பிரமணியன் வெளியிட்ட எம்விவியின் அரிய நிழற்படமும்… அதற்கு சில நண்பர்கள் இட்ட பின்னூட்டமும்…

 

 

Tr Chandrasekaran

அருமை.இன்றய
தலைமுறைக்கு
அறிமுகப்படுத்தியமைக்கு.

பாரிசாகரன்

முன்பொரு காலத்தில் காதுகள் படித்து மிரண்டிருக்கிறேன்

Srinivasan Yercaud அருமை. அவரின் எழுத்துகளை மீண்டும் உலாவரச் செய்யவேண்டும்..

LikeShow More Reactions

1

12 November at 22:17

Manage

Ulaganathan Kannaiya அவரது கையெழுத்தில் ஒவ்வொரு எழுத்திலும் அவ்வளவு நடுக்கம் இருக்கும்…எத்தனையோ மகான்கள், இந்த மொழிக்காக உடல், பொருள்,ஆவி தந்தார்களே!…

LikeShow More Reactions

1

12 November at 22:30

Manage

முல்லை நாதன் எழுத்தை பிழைப்பாய் வரித்துக் கொண்ட அற்புதமான எழுத்தாளர். வேள்விதீ , காதுகள் , என்று அவருடைய ஒவ்வொரு படைப்பும் இந்தத் தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும்.

LikeShow More Reactions

1

12 November at 22:45

Manage

Thiru Arasu vigragavinasagan-penname

LikeShow More Reactions

1

12 November at 22:54

Manage

Subashini Tirumalai அருமை!

LikeShow More Reactions

1

12 November at 23:37

Manage

KV Rajamany வேள்வி தீ…என்னால் மறக்க இயலாது

LikeShow More Reactions

1

22 hrs

Manage

நா. விச்வநாதன் பேரழகன்றோ
எம்.வி.வி.என்ற
எம் ஆசான்.

LikeShow More Reactions

1

21 hrs

Manage

Pena Manoharan ஆவணப்படம் பார்த்த ஞாபகம் நெல்லையில்…பேரன்பு….

LikeShow More Reactions

1

20 hrs

Manage

LikeShow More Reactions

1

18 hrs

Manage

Brindha Sarathy நித்ய கன்னி காவியமல்லவா?
அவருடன் அளவளாவிய நாட்கள் காலம் நமக்களித்த கொடை.

LikeShow More Reactions

1

18 hrs

Manage

Adalarasan Kudanthai நித்யகன்னி இருபத்து
ஐந்து முறைக்கு மேல்
மீண்டும் மீண்டும்See more

LikeShow More Reactions

2

16 hrs

Manage

தேனுகாவும், நானும் அவ்வப்பொழுது திரு. எம்.வீ. வெங்கட்ராம் அவர்களை வீட்டிற்கு சென்று பார்ப்பதுண்டு. வாங்க தேனுகா வாங்க மூர்த்தி என்று பெயர் சொல்லி வரவேற்று நாற்காலியில் அமரச்செய்து முதலில் தண்ணிர் ஜக்கில் இருந்து டம்ளரில் ஊற்றி கொடுப்பார். பின் இந்தாங்க வெற்றிலை செல்லம் என்று வெற்றிலை பெட்டியை கொடுப்பார். நீர் அருந்திவிட்டு வெற்றிலை போட்டுக்கொள்வோம். அதன்பிறகு இன்று என்ன படித்தீர்கள் என்று கேட்க அப்படியே உரையாடல் தொடரும். எம்.வீ.சாரும் தேனுகாவும் பேசுவதை கேட்பதே எனக்கு இன்பமயமாக இருக்கும். அதுவே ஒரு இலக்கிய கூட்டம்போல் தோன்றும். எம்.வீ. வி ஓர் குழந்தைப்போல் பேசுவார். பேச்சில் கர்வம், கோபம், பார்க்கமுடியாது. பின் தன் மனைவியை அழைத்து தேனுகா வந்து இருக்கிறார் பார் என்பார். அந்த அம்மையார் சமையல் கட்டில் இருந்து வரும்போதே மூன்று காப்பி டம்ளர்களுடன் வாங்க என்று கூறிவிட்டு அந்தகாலது ஓட்டு வீட்டு ஹாலில் பாதி நடந்து வந்து நிற்பார்கள். M.V. V சென்று காப்பிடம்ளரை வாங்கி எங்களிடம் கொடுத்து தானும் அருந்துவார் அருமையான கும்பகோணம் டிகிரி காபி. இப்படி ஒவ்வொரு முறை போகும்போதும் இந்த வரவேற்பு. அந்த நாட்கள் மறக்கமுடியாதவை. ஒரு சிலநாட்கள் எம்.வீ.வி. அவர்களை எனது ஸ்கூஓட்டரில் அழைத்துச்சென்று காந்தி பார்க்கில் கொண்டு விட்டு திரும்ப வீட்டிற்கு கொண்டுவிட்ட நாட்களும் உண்டு. காந்தி பார்க்கில் எம்.வீ.வி., கரிச்சான் குஞ்சு, தேனுகா, தஞ்சை பிரகாஷ், தாங்களும் (ரவி சுப்ரமணியன்) மற்றும் லிங்குசாமி, பிருந்தசாரதி, சரவண குமார் போன்ற எழுத்தாளர்களும் இருப்பார்கள்.ஒரு சுவையான இலக்கியக்கூடமாக இருக்கும். எம்.வீ.வி சார் வெற்றிலை செல்லத்துடன் கொண்ட போட்டோவை பார்த்ததும் என் மனம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. மறக்கமுடியாத Golden memories இல் இதுவும் ஒன்று.

5

7 hrsEdited

Manage

சைதை முரளி காதுகளைக் காட்டிலும் அவரின் வேள்வித் தீ எனக்குப் பிடித்த படைப்பு.

LikeShow More Reactions

1

12 hrs

Manage

Sivaprakasam Venkatesan I am reminded of my relation with him.really very touching photo,Ravi,tnks.

LikeShow More Reactions

1

11 hrs

Manage

Sivaprakasam Venkatesan Once he told me that the critic comes into the field only after the creation of the ‘Kaathu’, so creator is the first person,critic is the second person.This is how, MVV reacted to the criticism of others about his famous book.sweet memory gives this figure.

LikeShow More Reactions

2

11 hrs

Manage

Vk Murthy நன்றி

LikeShow More Reactions

1

10 hrs

Manage

LikeShow More Reactions

1

9 hrs

Manage

Sivaprakasam Venkatesan I can’t forget the pair of MVV and Karinjan kunju,moving around Jana Ranjani Hall, kumbakonam.

LikeShow More Reactions

1

8 hrs

Manage

Sivaprakasam Venkatesan Kumbakonam is really the intellectual capital of Tamilnadu.

LikeShow More Reactions

1

8 hrs

Manage

Vk Murthy நன்றி

LikeShow More Reactions

3 hrs

Manage

Vk Murthy Thanks

LikeShow More Reactions

2 hrs

Manage

Rufus V Antony என் கண்ணுக்குள் நிற்கிறது அய்யாவின் “காதுகள்”.

சிறப்பு… அருமை… உற்று நோக்குவதும் மெல்லிய புன்னகையில்…. அஹா…

LikeShow More Reactions

25 mins

MVV memories