முக்கிய செய்திகள்

எனது கடைசி படம் இந்தியன் 2 : கமல்ஹாசன் அறிவிப்பு…

எனது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இந்தியன் 2 என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

6 வயதில் களத்தூா் கண்ணம்மா படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறாா்.

தமிழ் சினிமா வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறாா்.

மேலும் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பா் டூப்பா் ஹிட்டான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாராக உள்ளது.

தற்போது படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கமல்ஹாசன் கேரளாவில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கொச்சி சென்றுள்ளாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள்.

தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன்.

நான் நடிக்க மாட்டேன் என்றாலும் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்து செயல்படும்.

மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் அது தொடா்ந்து ஈடுபடும்.

மக்கள் நலன் என்று வரும்போது மதசாா்பற்ற அணிகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன் என்றும் தொிவித்துள்ளாா்.