மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..

மியான்மர் (பர்மா)நாட்டில் வாழும் தமிழர்களின் அடையாளம் “பீலிகான் அருள்மிகு முனியாண்டி – அங்காளம்மன் கோயில் ” நிர்வாகம் தலமை தாங்கி நடத்திய பொங்கல் திருவிழாவுடன் மஞ்சுவிரட்டு விழா,

தமிழர் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கலை முன்னிட்டு பீலிகான் கிராமத்தில் 155 ஆவது ஆண்டாக இந்த மஞ்சு விரட்டு நடைப்பெற்றது.

பீலிகான் முனியாண்டி கோயில் தர்மகர்தா தெய்வத்திரு “குப்புசாமி கடாரத்தலைவர் ” அவர்களின் வாரிசு “திரு பாலகிருஷ்ணன் கடாரத்தலைவர் “அவர்களுக்கு மரியாதை செய்யபட்டு அவரது தலைமையில் விழா தொடங்கப்பட்டது .

கோயில் காளைகள் கிராமத்தார்களின் காளைகள் மற்றுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள பர்மிய விவசாயிங்களின் காளைகளும் உட்சாகமாக பங்கேற்று 100 முதல் 150 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதாக நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது

பர்மா காவல்துரையின் ஒத்துழைப்பிலும் பீலிகான் கிராமத்தார்களின் நல் உள்ளத்தாலும் பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி மிகச்சிரப்பா நடந்து முடிந்தது.

பர்மா ஊடகங்கள் பலவும் இச்செய்திகளை வெளியிட்டது தமிழர் பண்பாட்டு அடையாளங்களை நாடறிய செய்ய உதவியது .

அதில் ஏற்தழுவுதல் மஞ்சிவிரட்டு பற்றிய வரலாறு பெருமைகளை பர்மிய மொழியில் விளக்க எனக்கும் சிறு வாய்ப்பு கிடைத்தில் பெரும் மகிழ்ச்சி

மனம் நிறைவான நாள் … பீலிகான் கிராமம் ஒற்று மொத்த பர்மா தமிழர்களுக்கே பெருமை சேர்க்கிறது என்ற புகழ் பாரெங்கும் ஓங்குக

 

நன்றி சாரதாதேவி நாச்சியார்
முகநுால் பதிவு..