முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம் 38வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை.

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து, மயிலாடுதுறையைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று முதல்வர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.