என்.டி. ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்..


ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவரும், அம்மாநில முதல்வருமான என்.டி ராமாராவின் 4வது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. இவரது மகன், தெலுங்கு திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர்.

இந்தநிலையில், ஹரிகிருஷ்ணா, நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி- அடங்கினி நெடுஞ்சாலையில் காரில் சென்றார். இன்று காலை அவரது கார் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணா, தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 1956-ம் ஆண்டு பிறந்த ஹரிகிருஷ்ணா சிறு வயதிலேயே, குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமானார். 1970-ம் ஆண்டு என்.டி ராமாராவுடன் இணைந்து நடித்தார்.

அதுபோலவே என்.ஆர் தெலுங்குதேசம் கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தபோது அவருடன் பயணித்த ஹரி கிருஷ்ணா, பின்னர் 1998-ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் கால் பதித்த ஹரிகிருஷ்ணா தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அவர் நடித்த சித்தரய்யா உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றினார்.

ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது..

ஸ்டாலினின் முதல் தலைமை உரைக்கு ப.சிதம்பரம் பாராட்டு..

Recent Posts