முக்கிய செய்திகள்

‘நாச்சியார்’ டீஸர்: சர்ச்சையாகும் வசனம்….


பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாச்சியார்’. இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி ஸ்டூடியோஸ் மற்றும் ஈயன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீஸரை இணையத்தில் சூர்யா வெளியிட்டார். இதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், டீஸரின் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வார்த்தையால் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
“ஆண் ஒருவர் இந்த வசனத்தை பேசியிருந்தால், இந்த சர்ச்சை உருவாகி இருக்குமா.. பெண் பேசினால் மட்டும் ஏன் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது”, “சிவகுமார் குடும்பத்தில் இருப்பவர் இந்த வசனத்தைப் பேசியிருக்கக் கூடாது”, “பாலா படம் இப்படித்தான் இருக்கும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த டீஸரை சூர்யா வெளியிட்டால் அவரது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.