
நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை மீனவர்களிடையே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் திமுக தலைமைநிலைய செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுக நிர்வாகிகள் கைதாகினர்.
முன்னதாக நாகையில் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கரைப் பேட்டையில் படகில் பயணம் செய்து மீனவர்களிம் பேசினார்.