நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழ்வேளூர் அருகே நாகையில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடி அருகாமையில் உள்ள குளத்தில் விழுந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் லாவகமாக கையாண்டு பேருந்தை விபத்து ஏற்படாமல் நிறுத்தினார். ஓட்டுநரின் திறமையால் பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.