
நாகபட்டிணம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ம் தேதி தொடங்கப்படுகிறது. ஒன்றிய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா, அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கின்றனர். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமும் அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் இருந்தும் பங்கேற்கின்றனர்.