நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை..

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையாலும்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் நாகை ,திருவாரூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

வைத்தீஸ்வரன் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருந்த ஆயிரம் ஆண்டு பழமையான தலவிருட்சமான வேம்பு மரம், மழை காரணமாக முறிந்து விழுந்தது.

வேருடன் பெயர்ந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி திருக்கோயில் சுற்றுச்சுவர் மீது விழுந்தது. ஆனால் இதில் யாருக்கும் பாதிப்பில்லை.