நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு திருவிழா: ஆயிரக்காணக்கானோர் பங்கேற்பு…

நாகை மாவட்டம் நாகூரில், உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கங்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது ; அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது.
ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுல் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். நிகழ்வில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார்: பிரதமர் மோடி டிவிட்டரில் புகழாரம்…

அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்..

Recent Posts