முக்கிய செய்திகள்

நக்கீரன் கோபால் கைது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..அந்த அறிக்கையில்

பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்!

தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்ய வேண்“டம் என வலியறுத்தியுள்ளார்.