முக்கிய செய்திகள்

நடராஜனின் உடல் இன்று மாலை அடக்கம்…


சென்னையில் மரணமடைந்த நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் திங்கட்கிழமை நள்ளிரவு காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டு, அருளானந்தம் இல்லத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடராஜன் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதர் திவாகரன் தெரிவித்துள்ளார்.