முக்கிய செய்திகள்

நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு போலீசார் வலைவீச்சு

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்பவர் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் சன்னதிக்கு சென்றபோது, அர்ச்சனை தொடர்பாக, அவருக்கும் தீட்சிதர் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தீட்சிதர் தர்ஷன் தனது கன்னத்தில் அறைந்ததாகவும், அதனால் தான் கீழே விழுந்ததாகவும் சிதம்பரம் காவல்நிலையத்தில் லதா புகார் அளித்தார்.

இதையடுத்து, தீட்சிதர் மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள தீட்சிதரை போலீசார் தேடி வருகிறார்கள்.