முக்கிய செய்திகள்

உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை!

இதயநோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன்படி, 51 வகையான மருந்துகளின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்காப்பதற்கான 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ள தேசிய மருந்துகள் விலை ஆணையம், மேலும் 15 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மாற்றி அமைத்துள்ளது. இந்த விலை மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேசிய மருந்துகள் விலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 6 முதல் 53 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மருந்துகள் விலை ஆணையத்தின் ‘Pharama Sahi Daam’ என்ற ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

National Pharmaceutical Pricing Authority – NPPA Step in to reduce the prices of Life save medicines