நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு : நிதின் கட்காரி..


உலக தண்ணீர் தினத்தையொட்டி டில்லியில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்று, பேசினார்.

அப்போது அவர், மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கான நீண்டகால திட்டத்தை அரசு தீட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரியின் கிளை நதியான இந்திராவதியில் தண்ணீர் எப்போதும் அதிக அளவில் செல்கிறது. எனவே அங்கிருந்து தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் இணைக்கப்படும். இந்த தண்ணீர் சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் இருந்து சுமார் 1,000 டி.எம்.சி. தண்ணீரை இவ்வாறு இணைப்பதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும். இந்த திட்டம் குழாய் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர மேலும் 30 நதிகளை இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இத்திட்டங்கள் இந்த ஆண்டு தொடங்கி படிப்படியாக செயல்படுத்தப்படும். நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

ஸ்ரீநகரில் ஆசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

Recent Posts