முக்கிய செய்திகள்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்வு


தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சிப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நகராட்சிகளுக்கு பொருந்தாது என விலக்கு அளிக்கப்பட்டது. சண்டீகருக்கு மட்டும் அல்லாமல் நாடு முழுவதற்கும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பொருந்தும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு விளக்கம் அளித்துள்ளது.