மண்பாசம் என்பது ஆதிக்க உணர்வா….?: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

சமூக ஊடகங்களில் படைப்பாளி ஒருவர் தனது தளத்தில் ,” சொந்த ஊர் -கிராமம் என மண் மீது பற்று வைத்திருப்பவர்களும் ஆதிக்கசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்ற பொருளில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

முற்றிலும் தவறான கருத்து மட்டுமின்றி கண்டிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டி தனமாக கருத்து . இந்த கருத்துதான் அர்த்தமற்ற ஆதிக்கசக்தி கொண்டது.

தனது விளம்பர வெளிச்சத்தில் எதையும் தான் பேசலாம் என்ற மனப்போக்குதான் ஆதிக்கம் நிறைந்தது.

அமெரிக்காவில் அமர்ந்து பணி செய்தாலும் அவ்வப்போது கூகுளில் ஆண்டிப்பட்டி நிலவரத்தை தேடுவது கூட பிறந்த மண் மீதான பாசம் தான். இதெப்படி சாதி அடிப்படையில் அமையும் என புரியவிலை .

இன்றைய காலக்கட்டத்தில் எது பேசப்பட வேண்டிய பொருள், எது தவிர்க்க வேண்டிய பேச்சு என அறியாமல் வளைதளங்களில் கருத்துரைப்பது தவறான வழிக்காட்டுதல் ஆகும்.

பிறந்த மண்ணை நேசிக்காத ஒருவன் உண்டெனில் அவன் மிருகமாகவே இருக்க முடியும். மண்வாசனை ஒவ்வொரின் அடையாளம்.அது நியாயமான உணர்வு.

சமூக ஊடகங்களில் ஒருக் கருத்தை பதிவு செய்து அதன் மீதான விமர்சனங்களையும் , ஒத்தக் கருத்துக்களை அறிந்துக் கொள்வது என்பது ஆரோக்கியமான ஒன்று.

பிரபலமான ஒருவர் கருத்தை முன்வைக்கின்றார் என்றால் அது நூறு சதவிகிதம் ஏற்புடையது அல்ல.

அதே சமயத்தில் சாமானியன் ஒரு கருத்தை முன்வைக்கின்றார் என்றால் அதனையும் எளிதில் கடந்து விட முடியாது. மெய்ப்பொருள் நோக்கி ஆரோக்கியமான விவாதம் வேண்டும்

நன்றி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முகநுால் பதிவு