முக்கிய செய்திகள்

ஒரே நேரத்தில் தேர்தல் : மோடியின் முழக்கத்திற்கு நவீன் பட்நாயக் ஆதரவு

, சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அவரது இந்த விருப்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவ்வப்போது தேர்தல் வருவதால் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்படுகின்றன. எனவே, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்ற மோடியின் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

Naveen Patnaik Support PM’s Appeal