முக்கிய செய்திகள்

திருப்பதியில் நயன்தாரா காதலருடன் அவசர தரிசனம்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய காதலரை விமான நிலையத்தில் இருந்தே அவசர, அவசரமாக அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்  இந்த ஆண்டின் இறுதியில் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெறவிருப்பதாகவும்,  அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்  நடத்தினர்.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த விக்னேஷ் சிவனை நேரடியாக விமானநிலையம் சென்று சந்தித்த  நயன்தாரா , அங்கிருந்த படியே அவசர அவசரமாக காதலருடன் திருப்பதி சென்றுள்ளார்.

திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த நயன் ஜோடிக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பளித்து, பிரசாதங்களையும் வழங்கி உள்ளனர்.

தரிசனம் முடித்து கோவிலுக்கு வெளியே வந்த  நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுடன் நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். இதை அடுத்து காரில் சென்னைக்கு புறப்பட்டார் .

சமீபத்தில் நயன்தாரா அத்திவரதரை காஞ்சிபுரத்தில் தரிசித்தததும் இப்பொது திருப்பதி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .

டயானா மரியம் என்ற இயற்பெயரை உடைய நயன்தாரா காதலருக்காக கிறிஸ்துவ மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில்  கிசுகிசுக்கிறார்கள்.

அதெல்லாம் சரி… திருப்பதி செல்வதற்கு இத்தனை பரபரப்பு காட்டியது ஏன் என்பதுதான் ரசிகர்கள் மனதில் எழும் கேள்வி.

நினைத்ததை அப்போதே செய்து விட வேண்டும் என்ற குணம், நயன்தாராவின் இயல்பு என்பதால், காதலருடன் திருப்பதி செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் அதே பாணியில் செய்து முடித்துள்ளதாக கூறுகின்றனர் அவரது திரையுலக நண்பர்கள்.