நஜீப்பிற்கு எதிராக 25 குற்றங்களை பதிவு செய்தது ஊழல் தடுப்பு ஆணையம்..

ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு எதிராக 25 புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மலேசிய பிரதமராக பதவி வகித்த போது, நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதியில் 45,000 கோடி ரூபாய் அளவிற்கு தமது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டதாக நஜீப் ரஸாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கோரி தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று சம்மன் அனுப்பிய அடுத்த 2 மணி நேரங்களிலேயே நஜீப் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நஜீப்பிற்கு எதிராக 25 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவைகள் குறித்த விரிவான குற்ற அறிக்கையை ஊழல் தடுப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும் : திமுக அறிக்கை….

வீட்டை அபகரித்ததாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்..

Recent Posts