
டோக்கியோ ஒலிம்பிக் தடகள ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை செய்தார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றுள்ளார்.