நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தெரியாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு..


இணையதள வசதி இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தெரியாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகள் எடுக்காததால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தற்போது பள்ளிகளில் போதுமான அளவு இண்டர்நெட் வசதி இல்லாததாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும், அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே போராட வேண்டியதாக உள்ளது.

மேலும், விண்ணப்ப வழிமுறைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால், கிராமப்புற மாணவர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.
தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதால், அந்த மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவோ பயிற்சி பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.