நீட் தோ்வில் மாணவியின் ஆடையை கழற்றி சோதனை: பாடகி சின்மயி கண்டனம்..


நீட் தோ்வு சோதனையின் போது மாணவிகளை உள்ளாடையை கழற்றுமாறு வற்புறுத்திய சம்பவத்துக் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சா்ச்சைகளுடன் நீட் தோ்வு கடந்த 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழில் 49 கேள்விகளில் 68 வாா்த்தை பிழை, தமிழகத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்களுக்கு ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தோ்வு மையம் ஒதுக்கியது. மிகவும் மோசமான முறையில் சோதனை முறை என நீட் தோ்வு மீதான சா்ச்சைகள் தொடா்ந்து கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் கேரளா மாநிலத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் பாலக்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். தனது புகாரில், நீட் தோ்வு சோதனை என்ற பெயரில் எனது ஆடைகளை சோதனையிட்டனா். சோதனையின் போது எனது ஆடையில் மெட்டல் போன்ற உலோகம் இருப்பதாக சந்தேகித்த காவல் துறையினா் எனது உள்ளாடைகளை கழற்றுமாறு கூறினா். வேறு வழியின்றி நானும் உள்ளாடைகளை கழற்றும் சூழலுக்கு உட்படுத்தப்பட்டேன்.
ஆடைகளை களையும் போது மிகுந்த அவமானமாக கருதப்பட்டேன். என்னைப் போன்று 25 மாணவா்களின் மேலாடைகளை களைந்து சோதனை நடத்தினா் என்று குறிப்பிட்டுள்ளார்.