நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள் தற்போது தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்வு அறைக்கு வெளியே கடுமையான சோதனைகள் நடைபெறுகிறது. காதணிகள், கொலுசுகள் அணிந்த மாணவிகள் அவற்றை கழட்டிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.தமிழகத்தில் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவர்களை உளவியல் நீதியாக பாதிக்க செய்யும் வகையில் கைக் கடிகாரம் முதல் செருப்பு வரை பல கட்டுப்பாடுகளால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இது போல் பெண்கள் மூக்குத்தி,தோடு, வலையல்,கொழுசு, ஆடைக்கட்டுபாடு என பல கட்டுப்பாடுகளால் பெற்றோர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.