முக்கிய செய்திகள்

நீட் நேர்வில் இருந்து விலக்கு விவகாரம் : திமுக வெளிநடப்பு..

நீட் நேர்வில் இருந்து விலக்கு பெறும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு மறைத்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக மக்களை ஏமாற்றி விட்டதாக அரசு மீதும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மீதும் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.