நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மதிப்பெண் விவரங்கள் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் மாணவர்களின் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது. இதற்கிடையில், மும்பை உயர் நீதிமன்றத் தடை உத்தரவால் நீட் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. முதல் முறையாக மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் விவரங்கள் மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரபூர்வ நீட் தேர்வு முடிவுகள் https://neet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விரைவில் வெளியாகும் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் : நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன்..

பள்ளிக்கு மாணவர்களை வரவேற்று அசத்திய குன்றக்குடி கோயில் யானை..

Recent Posts