முக்கிய செய்திகள்

நீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் கேரளாவில் அவதி..


நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றனர். அவர்கள், தங்குவதற்கு உரிய விடுதிகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். விடுதிக் கட்டணமும், உணவுக் கட்டணமும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். தமிழக, கேரள அரசுகள் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர்.