முக்கிய செய்திகள்

நீட் கேள்வித்தாள் விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஎஸ்இக்கு கேள்வி..


சமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழில் வழங்கிய கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப் பென் வழங்க ஆணையிடும் மாறு மா.கம்யூ எம்.பி.,டி.கே ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ-க்கு 4 கேள்விகளை எழுப்பியுள்ளது.

* ஆங்கில மொழியில் இருந்து தமிழுக்கு எதன் அடிப்படையில் நீட் தேர்வு கேள்விகள் மொழிபெயர்க்கப்படுகின்றன

* நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன

* தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன

* தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுக்கப்படுகின்றது என்பது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறதா.

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.