அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்விற்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..


மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்துள்ள மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தி மற்றும் ஆங்கில வழியிலேயே அதிகமானார் எழுதுவதாகவும், பிராந்திய மொழிகளில் குறைவான பேர் எழுதுவதால் இந்த கோளாறு நேர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.