நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை..

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 6ம் தேதி நடந்தது.

நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட 143 மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 79 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 17 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆயிரத்து 121 பேர் தேர்வாகி உள்ளனர்.

வெற்றிபெற்றவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள முதன்மையான மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.

பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் ப்யூஷ் கோயல்: ஏஎன்ஐக்கு அளித்த முழுமையான பேட்டி

குயின்ஸ்லாந்து வரலாறு காணாத கனமழையால் மிதக்கிறது..

Recent Posts